Arun Vijay

Arun Vijay : தடம் வெற்றியடைந்தால் அருண் விஜய் இயக்குனர் மகிழ் திருமேனிக்கு பரிசு ஒன்றை அளித்துள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இதுவரை இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்த என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கும் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள தடம் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தடம் பாதித்துள்ளது. இதனால் அருண் விஜய் உட்பட ஒட்டு மொத்த படகுழுவும் மகிழ்ச்சியில் உள்ளது.

இந்நிலையில் அருண் விஜய் இயக்குனர் மகிழ் திருமேனிக்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.