புனேவில் நடைபெற்ற ஏ ஆர் ரகுமானின் இசை கச்சேரி பாதியில் நிறுத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

உலக அளவில் அனைவருக்கும் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக பரிச்சயமானவர் ஏ ஆர் ரகுமான். ஆஸ்கார் நாயகனாக வலம் வரும் இவரது இசைக்கென்று எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளங்கள் நாடு முழுவதும் இருந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய முன்தினம் புனேவில் லைட்மேன்களுக்கு நிதி திரட்டும் வகையில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏ ஆர் ரகுமான் நடத்தியுள்ளார். அதனை நேரில் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து நிகழ்ச்சியை உற்சாகத்துடன் கண்டு களித்தனர். அப்போது இசை மேடையில் பாடி கொண்டிருந்த ஏ ஆர் ரகுமானை பாட விடாமல் பூனே காவல் அதிகாரி தடுத்துள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதாவது, இசை நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் நடத்தப்பட்டதால் காவல்துறையினர் அவரை பாட விடாமல் தடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பாடலை பாதியில் நிறுத்திவிட்டு அவர் வெளியேறும் காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.