காதலனுடன் ஒரே இடத்துக்கு சுற்றுலா சென்று மாட்டிக் கொண்டுள்ளார் அர்ச்சனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் நாயகனாக நடித்தவர் அருண். அதேபோல் ராஜா ராணி சீரியல் வில்லியாக நடித்து வந்தவர் அர்ச்சனா.

இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய வண்ணம் இருக்கின்றன. ஆனால் இதுவரை இருவரும் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இப்படியான நிலையில் ராஜா ராணி அர்ச்சனா மற்றும் பாரதி கண்ணம்மா அருண் என இருவரும் ஒரே இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இருவரும் சுற்றுலா சென்றுள்ள வீடியோவை தனித்தனியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோக்கள் மூலம் இருவரும் ஒரே இடத்திற்கு சுற்றுலா சென்று இருப்பதை கண்டுபிடித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CocW__1AD01/?igshid=YmMyMTA2M2Y=

https://www.instagram.com/reel/CoiDu2JjbjE/?igshid=YmMyMTA2M2Y=