Aparna Balamurali Speak
Aparna Balamurali Speak

Aparna Balamurali Speak – சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூரரைப் போற்று. இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

வேஷ்டியை மடித்துவிட்டு விமானத்திற்கு முன்பு சூர்யா நிற்பது போன்ற இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்துள்ளது.

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர்.

தொடர்ந்து முன்னணி ஹீரோயின்களுடன் நடித்த சூர்யா தற்போது இவருடன் இணைந்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

இந்நிலையில் இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து நடிகை அபர்ணா சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.

அதில் தன்னுடைய மகேஷண்டே பிரதிகாரம் மலையாள படத்தை பார்த்த பிறகே தனக்கு இந்த வாய்ப்பை இயக்குநர் சுதா வழங்கியதாக அபர்ணா கூறியுள்ளார்.