Anushka Shetty
Anushka Shetty

Anushka Shetty :

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு,

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார்.

இது ஒருப்பக்கம் இருக்க தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனும் விரைவில் துவங்க உள்ளது.

அந்த நிகழ்ச்சியை நடத்தப் போவது யார் என்பது தான் தற்போது தெலுங்கு ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

ஏனெனில் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நானி தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் தற்போது முன்றாவது சீசனை தொகுத்து வழங்க பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை இது உறுதியாகும் பட்சத்தில் இந்தியாவில் முதல்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெண் நடிகர் எனும் மாபெரும் சாதனையை அனுஷ்கா படைப்பார். கூடவே கோடிகளில் சம்பளத்தையும் பெறுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here