சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா வேடத்தில் நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Anushka Replace Jyothika in Chandramukhi 2 : தமிழ் சினிமாவில் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சந்திரமுகி. கிட்டத்தட்ட பல மாதங்கள் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர் என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

மகாளய பட்சம் : முன்னோரை வழிபட முன்னேற்றம் பெருகும்

பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் பி வாசு. ஆனால் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் பேட்டையில் கதாபாத்திரம் மிகவும் குறைவாகவே காட்டப்பட்டது. ஆனால் இரண்டாம் பாகம் முழுக்க முழுக்க வேட்டையின் கதாபாத்திரத்தை சுற்றியே உருவாக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுபோன்ற பேய் கதைகளில் நடிப்பதில் அனுஷ்கா கை தேர்ந்தவர் என்பதால் படம் படு மோசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Thalapathy 66 Director Opens Up – Latest Update..! | Vijay | Vamshi Paidi Pally | Viral | Kollywood