நாளைய அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் ஒன்று காத்துக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

Announcement Update on Ajith 62 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் நடிப்பில் அஜித் 61 என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் பரவின.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஒருவேளை நாளை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் அது அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.