சிம்புவின் புதிய படம் பற்றிய அறிவிப்பை திடீரென படக்குழு வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Announcement on STR Next Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகியிருந்த படங்களில் ஒன்று தான் மஃப்டி படத்தின் ரீமேக்.
கன்னட சினிமாவின் சிவராஜ்குமார் மற்றும் ஸ்ரீ முரளி ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் மஃப்டி. இந்த படத்தின் ரீமேக் உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கிருஷ்ணா இந்த படத்தை இயக்க சிம்பு சிவராஜ்குமார் கதாபாத்திரத்திலும் கௌதம் கார்த்திக் ஸ்ரீ முரளி கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
படத்தின் படப்பிடிப்புகள் கூட தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் கால்ஷீட் பிரச்சனை காரணமாக சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இந்த படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இப்படியான நிலையில் சிம்பு உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இதனால் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் மஃப்டி படத்தின் ரீமேக்கை மீண்டும் கையில் எடுத்துள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதோ அந்த பதிவு