சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த சூட்டிங் முடிவுக்கு வருவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Annathae Shooting Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் மே 10ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என தகவல் கிடைத்துள்ளது. அதன் பிறகு இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு தீபாவளியன்று ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பலர் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.