அனிருத்துக்கு மிகப் பெரிய நடிகரின் படத்தில் இசையமைக்கும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Anirudh Entry in Bollywood : தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். அஜித், விஜய், ரஜினி, கமல், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வருகிறார். ‌‌‌‌‌

தற்போது தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 65, இந்தியன்2 உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து அனிருத்துக்கு பாலிவுட்டில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அனிருத்துக்கு அடித்த ஜாக்பாட்.. அடுத்து யாருடைய படத்திற்கு இசையமைக்கிறார் தெரியுமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் நடிக்க ஆனந்த் ராய் இயக்கும் புதிய படத்திற்கு இவர் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக பாலிவுட் சினிமாவில் தடம் பதிக்கிறார் அனிருத்.

இதற்கு முன்னதாக இவர் இந்தியில் டேவிட் என்ற படத்தில் ஒரேயொரு பாடலுக்கு இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.