Anirudh About Vedhalam Movie

அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் பிக் பாடல் ஒன்று தனக்கு பிடிக்கவே பிடிக்காது என அனிருத் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Anirudh About Vedhalam Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அஜித் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று வேதாளம். சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் தான் இசை அமைத்தார்.

அஜித் படத்தோட அந்த டியூன் செம ஹிட், ஆனால் எனக்கு பிடிக்கவே பிடிக்காது - அனிருத் ஓபன் டாக்

இந்தப் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. ஆனால் இந்தப் பாடலும் எனக்கு சுத்தமாக பிடிக்காது என அனிருத் கூறியுள்ளார். இந்த டியூனை மாற்றி கொடுக்கிறேன் என இயக்குனரிடம் கூறியிருந்தேன். ஆனால் அஜித் சாரின் சிறுத்தை சிவா அவர்களும் டியூன் நன்றாக இருக்கிறது என கூறினார்கள்.

அவர்கள் கூறியபடியே எதிர்பாராத அளவிற்கு ஆலுமா டோலுமா பாடல் வெற்றி பெற்றது என அனிருத் பேசியுள்ளார்.