ஆண்ட்ரியா தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு டப்பிங் கொடுத்து வருகிறார். அதில் இவர் சுதப்பும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை மற்றும் பாடகியாக வலம் வருபவர் தான் ஆண்ட்ரியா. இவர் ஏற்கனவே ஹாரர் படமான ‘அரண்மனை1 மற்றும் 3’ ஆம் பாகத்தில் அசத்தலான நடிப்பை தந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தார்.

இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் தான் “பிசாசு 2”. இப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு தற்போது ஆண்ட்ரியா தனது சொந்த குரலிலேயே டப்பிங் கொடுத்து வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ’முதன்முதலில் நான் தெலுங்கில் டப்பிங் பேசுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் டப்பிங்கில் அவர் சொதப்பி வரும் வீடியோவை பதிவிட்டிருக்கிறார். மேலும் அவருக்கு தெலுங்கு கற்றுக் கொடுக்க ஒரு நபர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.