ஓடிடி.யில் ‘வித் லவ்’ படம் வெளியீடு..

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘வித் லவ்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘வித் லவ்’. செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 6-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் மூலமாக நாயகனாகவும் அறிமுகமானார் ‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இப்படத்தின் வெற்றியினால் தற்போது நாயகனாக நடிக்க பல்வேறு வாய்ப்புகள் அபிஷனுக்கு வந்து கொண்டிருக்கிறது.

25 நாட்கள் திரையிடப்பட்டு 35 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக ‘வித் லவ்’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் மூலம் படக்குழுவினருக்கு நல்ல லாபம் கிடைத்தது. இதனால் எம்.ஆர்.பி நிறுவனம் மற்றும் ஜியோன் பிலிம்ஸ் இணைந்து அடுத்தடுத்த படங்களை திட்டமிட்டு வருகிறது.

with love movie ott release date
soundarya rajinikanthstorywith love movieஅபிஷன் ஜீவிந்த்வித் லவ்