கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படமான ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
‘திருடன் போலீஸ்’, ‘Ninu Veedani Needanu Nene’, ‘Single’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இந்தப் படத்தை இயக்குகிறார். KVK Productions நிறுவனத்தின் சார்பில் குடிபுடி விஜய் குமார் தயாரிக்கும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவராஜ்குமார் மற்றும் கீதா சிவராஜ்குமார் இணைந்து வெளியிட்டனர்.
வெளியான போஸ்டரில், இதுவரை ரசிகர்கள் பார்த்திராத இளமையான மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் சிவராஜ்குமார் காட்சியளிக்கிறார். ஒரு கையில் கேமராவையும், மற்றொரு கையில் சிங்கக் குட்டியையும் ஏந்தியிருக்கும் அவரது வித்தியாசமான லுக் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், ‘Welcome to Wildlife’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு தொடக்க தேதி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.