5 இயக்குநர்கள் இயக்கியுள்ள ‘வவ்வல்ஸ்’ படத்தின் கதை என்ன?

5 இயக்குநர்கள்; 5 கதைகளுடன் ‘வவ்வல்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

யூகிசேது, சின்னி ஜெயந்த், சம்​யுக்தா விஸ்​வ​நாதன், ராஜ் அய்​யப்​பா, தீபக் பரமேஷ் உள்​பட பலர் நடித்​துள்ள திரைப்​படம் ‘வவ்வல்ஸ்; அன் அட்​லஸ் ஆஃப் லவ்’.

5 கதைகளைக் கொண்ட இப்​படத்தை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்​தோஷ் ரவி மற்​றும் ஜெகன் ராஜேந்​திரன் ஆகிய 5 இயக்​குநர்​கள் இயக்​கி​யுள்​ளனர். ராஜு ஷெரேகர் தயாரித்​துள்ள இப்​படம் வருகிற 13-ந்தேதி வெளியாகிறது. இதன் இசை வெளி​யீட்டு விழா சென்னையில் நடை​பெற்​றது.

நிகழ்ச்சியில், யூகிசேது பேசும்​போது, ‘மிமிக்​ரி​யில் இருந்து நடிகரானவர் சின்னி ஜெயந்த். அந்த டிரெண்டை முதலில் ஆரம்​பித்து வைத்​தவர் அவர்​தான். காதலைப் பற்றி நிறைய விஷ​யங்​கள் இந்​தப் படத்​தில் பேசி​யிருக்​கிறோம். இசையமைப்​பாளர், ஒளிப்​ப​தி​வாளர், படத்​தொகுப்​பாளர் என அனை​வரும் சிறப்​பாக பணிபுரிந்​துள்​ளனர். குறும்​படங்​களும் சினி​மா​வில் வெற்றி பெற முடி​யும் என்பதற்கு முன்​னு​தா​ரண​மாக இந்​தப் படம் இருக்​கும் என நம்​பு​கிறேன்’ என்றார்.

படத்தை வெளி​யிடும் விநியோகஸ்தர் ஹரி உத்ரா கூறும்​போது, ‘அடல்ட் மற்​றும் வன்​முறை நிறைந்த படங்​களே இப்​போது அதி​கம் வருகின்றன. உணர்​வுப்​பூர்​வ​மாக சரி​யான படத்தை எடுக்கும் இயக்​குநர்​கள் இன்று குறைவு. அதை இந்த ஐந்து இயக்​குநர்​களும் சரி​யாகச் செய்திருக்கிறார்​கள்​’ என தெரிவித்துள்ளார்.

vowels created by 5 directors

investigationstoryvowels movieகதைவவ்வல்ஸ்