மறைந்த ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த செய்தியை கேட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கதறி அழுதி இருந்தார்.
இந்த நிலையில் தளபதி விஜய் அவர்கள் மறைந்த ரோபோ சங்கருக்கு இரங்கல் தெரிவித்தும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்
அதில் நண்பர் திரு ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனை அடைந்ததாகவும் கூறியுள்ளார் இது மட்டுமில்லாமல் நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்றும் அவர் அனைவரிடமும் அன்பாக பழகும் பண்பாளர் என்றும் கூறியுள்ளார்.மேலும் ரோபோ சங்கர் அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.