புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்த த.வெ.க தலைவர் விஜய்..!

புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார் தளபதி விஜய்.

Vijay helped the people affected by heavy rain

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதி படமான தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த படத்திற்குப் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என அனைவரும் அறிந்ததே.சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்த மாநாட்டில் ரசிகர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

தற்போது சென்னையில் பெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். தளபதி விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகமான பனையூருக்கு 250 குடும்பங்களை அழைத்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி உள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

Vijay helped the people affected by heavy rain
affected by heavy rainthe peopleVijay helpedVijay helped the people affected by heavy rainகனமழைதளபதி 69தளபதி விஜய்புயல்பெஞ்சல் புயல்