வனிதா இயக்கிய ‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்’ பட போஸ்டர்; ரஜினி வெளியிட்டார்

‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்ஸ்’ பட தகவல்கள் பார்ப்போம்..

விஜயகுமார் – மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதா, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக ரீ என்ரி கொடுத்துள்ளார். தற்போது, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்’ படம் மஞ்சுளாவின் பிறந்த நாளான ஜூலை 4-ம் தேதி வெளியாக உள்ளது.

வனிதாவின் விவாகரத்து, மீண்டும் திருமணம் என அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இணையத்தில் வைரலானது. பின்னர், அவருக்கு விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மீண்டும் திரை வெளிச்சத்தைக் கொடுத்தது.

பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருந்தார். தற்போது அவர் இயக்கி நடித்துள்ள படம் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. வனிதாவே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி நிலையில், படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், வனிதா தனது தாயாரின் பிறந்த நாளான ஜூலை 4-ந்தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்குச் சென்ற அவர், ரஜினியின் கைகளால் படத்தின் வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த புகைப்படங்களை வனிதா தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.

actor rajinikanthactress vanitha vijaykumarmrs and mrதிருமணம்ரஜினிகாந்த்