தக் லைஃப் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.
thug life movie making video viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ப்ரீ புக்கிங்கிலும் மாஸ் காட்டி வருகிறது. அதாவது இதுவரை 24 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோவை பட குழு வெளியிட்டு உள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.