மே 16-ந்தேதி கோடைகால கொண்டாட்டம்: தக் லைஃப் படக்குழு இனிய தகவல்

ரசிகர்களுக்கு ஓர் இனிய தகவலை தக் லைஃப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இது குறித்துப் பார்ப்போம்..

2 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனும் சிம்புவும் ஒரே மேடையில் இருந்தபோது சிம்பு, ‘நான் எந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? என கமலிடம் கேட்டார்.

அதற்கு கமல்ஹாசன், ‘நீங்கள் மென்மேலும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அதற்கு முன்பு என்னுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும்’ என்றார். அதாவது சூசகமாக ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க கமல் சிம்புவிடம் கேட்டிருந்தார். தற்போது இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியான நிலையில், அப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் இன்று வெளியானது. ஜிங்குச்சா பாடல் வரிகளை கமல்ஹாசன் எழுதி இருக்க சிம்பு ஆடியிருக்கிறார். இதனிடையே படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது என்ற தேதியையும் படக்குழு இன்று அறிவித்துள்ளது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த அந்த நாள் மே 16-ந்தேதி என அறிவித்துள்ளனர்.

மே 16-ந்தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தக் லைஃப் படத்தில் இன்னும் இதுபோன்ற சுவாரஸ்யமான சம்பவங்களும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரசிகர்களுக்கு கோடைகால கொண்டாட்டமாக மே16-ந்தேதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor kamal haasandirector maniratnamthug life movieகமல்ஹாசன்சிம்பு