போஸ்டருடன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை கொடுத்துள்ளது தக் லைப் பட குழு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன் இவரது நடிப்பிலும் மணிரத்னம் இயக்கத்திலும் உருவாகி உள்ள திரைப்படம் தக் லைஃப். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வரும் இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மேலும் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், அலி பசல் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது போஸ்டர் உடன் பட குழு அறிவிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளது.
அதாவது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “ஜிங்குச்சா” என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக அறிவித்து உள்ளது இந்த போஸ்டரில் கமல் மற்றும் சிம்பு இருவரின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.