‘KD: The Devil’ படத்திலிருந்து ‘திற நீ எந்தன் தரணி திற நீ’ பாடல் வெளியீடு

பிரேம் இயக்கத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘KD: The Devil’ திரைப்படம் ஏற்கனவே நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. KVN Productions சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்த படம், இந்த ஆண்டின் முக்கியமான பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், ‘திற நீ எந்தன் தரணி திற நீ (Thira Nee Enthan Tharani Thira Nee)’ எனும் துள்ளலான டான்ஸ் நம்பர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடியான பீட் மற்றும் கொண்டாட்ட உணர்வுடன் உருவான இந்த பாடல், ரசிகர்களிடையே ஒரு ‘பார்ட்டி அந்தம்’ ஆக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் நடன குயின் நோரா ஃபதேஹி மற்றும் சஞ்சய் தத் இணைந்து கவர்ச்சியான ஸ்கிரீன் பிரசென்ஸுடன் இந்த பாடலில் தோன்றுகின்றனர். விறுவிறுப்பான நடன அசைவுகள் மற்றும் உற்சாகமான காட்சிகள் பாடலின் ஹைலைடாக அமைந்துள்ளன.

அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு ராஜலட்சுமி குரல் கொடுத்துள்ளார். மதன் கார்க்கி எழுதிய வரிகள் பாடலின் கொண்டாட்ட உணர்வை மேலும் உயர்த்துகின்றன.

இணையத்தில் வெளியாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. விரைவில் பிளேலிஸ்ட்களிலும், நடன மேடைகளிலும் இந்த பாடல் இடம் பிடிக்கும் என படக்குழு நம்புகிறது.

‘KD: The Devil’ திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

Dhruva SarjaKD - The DevilNora FatehiSunjay DuttThira Nee Endhan Tharani Video Song