இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்..
‘கெவி’ : இப்படம் கொடைக்கானல் மலைப்பகுதியில், சாலை மற்றும் மருத்துவ வசதி இல்லாத ஒரு கிராமத்தில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, உண்மை சம்பவங்களின் பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஆதவன் மற்றும் ஷீலா ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ள இப்படம் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
‘மாயக்கூத்து’: ‘மாயக்கூத்து’ என்பது ஏ.ஆர்.ராகவேந்திரா எழுதி இயக்கிய படமாகும். நாகராஜன், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் டில்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
‘தண்டர்போல்ட்ஸ்’: மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்ததாக உருவாகி வரும் படம் ‘தண்டர்போல்ட்ஸ்’. இது எம்.சி.யுவின் 36-வது படமாகும். பிரபல இயக்குனர் ஜேக் ஷ்ரேயர் இயக்கி உள்ளார். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
‘கிங்டம்’: கௌதம் தின்னனுரி எழுதி இயக்கிய அதிரடி திரில்லர் படம் கிங்டம். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
‘வசந்தி’: வசந்தி ரஹ்மான் சகோதரர்களால் எழுதி இயக்கப்பட்ட மலையாள படம் வசந்தி. இதில் வசந்தியாக ஸ்வாசிகா சிஜு வில்சன், ஸ்ரீல நல்லேடம், மது உமாாலயம், குருவாயூர், வினோத் குமார், ஹரிலால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
‘லவ் மேரேஜ்’: அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் ‘லவ் மேரேஜ்’. இதில் சுஷ்மிதா பட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ இயக்குநர் ஜோனதன் எண்ட்விஸ்ட் இயக்கத்தில் ஜாக்கி ஜான், பென் வாங் உள்ளிடோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கராத்தே கிட்: லெஜண்ட்ஸ். இப்படத்திலும் சிறுவனுக்கு கராத்தே பயிற்றுவிக்கும் மாஸ்டராக ஜாக்கி ஜான் நடித்துள்ளார். இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடிதளத்தில் வெளியாகவுள்ளது.
‘தி டோர்’: இயக்குனர் ஜெய்தேவ் இயக்கத்தில் பாவனா நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘தி டோர்’. மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராமேஷ் ஆறுமுகம், பிரியா வெங்கட், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.