தளபதி விஜய் சுவாரசிய தகவல்கள் சில பகிர்ந்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
H வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பில் இந்த திரைப்பட உருவாகியுள்ளது.இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் விஜய் முன்பு கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது அவர் நான் படிப்பில் பெரிய அளவில் சிறந்து விளங்கவில்லை அதனால் திரைப்படங்களில் என்னை அறிமுகப்படுத்துமாறு தந்தையிடம் கேட்டேன் ஆனால் அவர் முடியாது என்று சொன்னதால் வீட்டை விட்டு போவது போன்ற பில்டப் கொடுத்து உதயம் தியேட்டரில் படம் பார்க்கச் சென்று விட்டேன் என கூறியுள்ளார்.
ஆனால் என்னுடைய அப்பா கரெக்டாக வந்து என்னை கண்டுபிடித்து விட்டு அழைத்துச் சென்று விட்டார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.