ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமம் எத்தனை கோடி தெரியுமா? இவ்வளவு கம்மியா.!

ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


thalapathy vijay in jananayagan movie ott update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ரிலீசுக்குகாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் 125 கோடிக்கு வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால் ஓடிடியில் நல்ல விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தை netflix நிறுவனம் 125 கோடி கொடுத்து வாங்கியதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.


thalapathy vijay in jananayagan movie ott update
jananayagan movieott updateThalapathy Vijaythalapathy vijay in jananayagan movie ott updateஓடிடி உரிமம்பாபி தியோல்பிரியாமணிபூஜா ஹெக்டேமமீதா பைஜூஜனநாயகன்