Browsing tag

investigation

நடிகை லட்சுமி மேனனை கைது செய்யக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு..

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொச்சியில் உள்ள ஒரு பாரில், லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனனுடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனன் மற்றும் 3 பேர் மீது வழக்குப் […]

ரவிமோகனின் சொத்துகளை முடக்க மனு தாக்கல்: நீதிமன்றம் அனுமதி..

ரூ.6 கோடி விவகாரம் தொடர்பாக, நடிகர் ரவிமோகன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் விவரம் காண்போம்.. படத்தில் நடிக்க முன்பணமாக பெற்ற ரூ. 6 கோடியை திருப்பி செலுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கும் வகையில், மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் என்ற படத் […]

படப்பிடிப்பில் எதிர்பாராது சம்பவம்: 120 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

படப்பிடிப்பு தளங்களில் எதிர்பாராத விபத்துகள் நிகழ்வதுண்டு. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதும் உண்டு. ஆனால், இதோ இந்த சம்பவம் மிக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ரன்வீர் சிங் நடித்துவரும் படம்,’துரந்தர்’. இதில், மாதவன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, சாரா அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். ஆதித்யா தர் இயக்கும், ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் குழந்தைகள் உள்பட சுமார் 600-க்கும் மேற்பட்டோர் […]

‘காலா’ பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் கொலை: 2 பேர் கைது..

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தமிழில் ‘காலா’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், அவரது உறவினர் ஆசிஃப் குரேஷி கொல்லப்பட்டார். வீட்டின் வாசலில் ஸ்கூட்டி நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வாக்குவாதத்தில் முற்றி, கைகலப்பாக மாறி, ஹூமா குரேஷியின் உறவினர் ஆசிஃப் குரேஷி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிஃப் குரேஷி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி, வீட்டின் வாசலில் […]

ஹோட்டல் அறையில் பிரபல நடிகர் மரணம்..

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் (51). சின்னத்திரை, மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள இவர் மிமிக்ரி கலைஞரும் கூட. இவர் ‘பிரகாம்பனம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக, கேரள மாநிலம் சோட்டானிக்கராவுக்கு வந்தார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்ததால் அறையை காலி செய்ய திட்டமிட்டிருந்தார். அவர் அறையின் கதவு நீண்ட நேரம் திறக்காததால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது கலாபவன் நவாஸ் சுயநினைவின்றி இருந்தார். […]

நடிகர் பிரகாஷ்ராஜிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை..

சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கியுள்ள விஜய் தேவரகொண்டா, ராணா, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. ED அனுப்பிய சம்மனில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு தேதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவ்வகையில், முதலில் ராணா ஜூலை 23-ந் தேதி அன்று […]

நடிகை ரம்யாவுக்கு ஆபாச தகவல்கள்: 11 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..

கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்திக்கொலை செய்த வழக்கில் கைதாகி சிறை சென்றார். இப்போது ஜாமீனில் இருக்கிறார். அதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதுபற்றி ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘சாதாரண குடிமகனுக்கு உச்ச நீதிமன்றம்தான் நம்பிக்கை அளிக்கும். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன்’ என கூறியிருந்தார். இதனால், தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவுக்கு கண்டனம் தெரிவித்து, ஆபாசத் தகவல்களை […]

சொத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: ரவிமோகனுக்கு கோர்ட் உத்தரவு

ரவி மோகன் நடிப்பில் தற்போது பராசக்தி, கராத்தே பாபு, ஜீனி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதனிடையே, கோவையை சேர்ந்த பாபி டச் கோல்டு யூனிவர்சல் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க, ரவிமோகனை ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக, 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 80 நாட்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் ரவி மோகன். தான் கால்ஷீட் ஒதுக்கியபோதும் படப்பிடிப்பை தொடங்காததால், தன்னால் வேறு படங்களில் நடிக்க முடியவில்லை. தான் கொடுத்த […]

அதர்வா நடித்த க்ரைம் திரில்லர் ‘டிஎன்ஏ’ படம்: ஓடிடி.யில் வெளியீடு..

குழந்தையை தொலைத்த ஒரு தம்பதியின் வலி நிறைந்த தேடல் ‘டின்ஏ’ கதைக்களம். நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் ஜூன் 20-ந்தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படம் வெளியீட்டுக்கு முன்பே, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்டுவிட்டது. தற்போது ஜூலை 19-ம் தேதி ‘டி.என்.ஏ’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் நிமிஷா சஜயன், ரமேஷ் […]

நடிகை ரன்யாவுக்கு, மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு..

நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். ரூ.12.56 கோடி மதிப்புள்ள தங்கத்தை துபாயில் இருந்து சட்டவிரோதமாக கடத்தியதற்காக அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், அவர் வெளிநாட்டுச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளார். மார்ச் மாதம், ரன்யா ராவ் துபாயிலிருந்து பெங்களூரு வந்தபோது, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 14.2 […]