Browsing tag

investigation

லதா ரஜினிகாந்த் மீதான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு ‘கோச்சடையான்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான மீடியா குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு, சென்னையை சேர்ந்த விளம்பர நிறுவனம் ரூ.10 கோடியை கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த ரூ.10 கோடிக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை மீடியா குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக கூறியும், அதற்கு உத்தரவாதம் அளித்த லதா ரஜினிகாந்த் மீதும் பெங்களூரு கோர்ட்டில் விளம்பர நிறுவனம் […]

மம்முட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை; ஆவணங்கள் பறிமுதல்..

பிரேமலு, நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான ‘லோகா’ திரைப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் தயாரித்த இப்படம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது தெரிந்ததே. இந்நிலையில், பூடானில் இருந்து சொகுசு கார்​கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்​பாக சென்​னை​யில் துல்​கர் சல்​மான், அவரது தந்தை மம்​முட்​டி​யின் வீடு, அலு​வல​கம் உட்பட தமிழகம், கேரளா​வில் மொத்​தம் 17 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரி​கள் சோதனை நடத்​தி​யுள்​ளனர். இந்​நிலை​யில், துல்​கர் சல்​மான் […]

க்ரைம் த்ரில்லர் மூவி ‘மவுனம்’ படத்தின் கதை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது திகில் சார்ந்த கதைகள் வரவேற்பு பெற்று வருகின்றன. அவ்வகையில், குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டு வெளிவர இருக்கும் க்ரைம் த்ரில்லர் மூவி பற்றி காண்போம்.. கன்னடப் பட இயக்குநர் ஏ.மகேஷ்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘மவுனம்’. இப்படத்தில் அபிராம் வர்மா, ஜேஎஸ்ஆர்.ரித்திக், சுமன் உள்பட பலர் நடிக்கின்றனர். சாம் மணிகண்டன் இசை அமைக்கிறார். மேஜிக் மக் மூவிஸ் தயாரிக்கும் இந்த க்ரைம் த்ரில்லர் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், […]

விஜய் தேவரகொண்டா பயணித்த கார் விபத்து: போலீஸ் விசாரணை..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஐதராபாத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தானா திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் […]

சூரியின் படப்பிடிப்பில் விபத்து; 1 கோடி மதிப்புள்ள பொருள் சேதம்..

‘மாமன்’ படத்தை தொடர்ந்து மதிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் ‘மண்டாடி’. இதன் படப்பிடிப்பு ராமநாதபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தொண்டி என்ற பகுதியில் கடலில் முக்கிய காட்சிகளை படமாக்கி வந்தது படக்குழு. அப்போது எதிர்பாராத விதமாக கேமரா இருந்த படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் படகில் இருந்த 2 பேர் கடலில் மூழ்கினர். அவர்களை சுற்றியிருந்தவர்கள் பத்திரமாக மீட்டார்கள். இந்த விபத்தில் எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், கேமராக்கள் கடல் […]

கரூர் சம்பவம் பற்றி நடிகை கயாடு லோஹர் சர்ச்சைப் பதிவா?: விளக்கம்..

‘கரூர் சம்பவத்தில் எனது நண்பரை இழந்துவிட்டேன். அனைத்தும் தவெகவின் சுயநல அரசியலுக்காக. உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் விஜய்?’ என்று நடிகை கயாடு லோஹர் பதிவிட்டதாக இணையத்தில் வைரலானது. இது தொடர்பான புகைப்படங்களும் பரவின. இது தொடர்பாக கயாடு லோஹர் தனது எக்ஸ் தளத்தில், ‘எனது பெயரில் பரவும் எக்ஸ் தளக் கணக்கு போலியானது. எனக்கும் அதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. மேலும், அங்கு வெளியிடப்பட்ட அறிக்கைகளும் என்னுடையது அல்ல. கரூர் பேரணியில் நடந்த துயர […]

நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிரான வழக்கு: கோர்ட் தடை நீட்டிப்பு..

தமிழ் சினிமாவில் நான் அவனில்லை 2, துணை முதல்வர், சிநேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர், கேரள மாநில நடிகர் சங்கமான ‘அம்மா’வின் தலைவராக தற்போது உள்ளார். முன்னதாக மோகன்லால் இருந்தார். ஸ்வேதா மேனன், திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் பணத்துக்காக ஆபாசமாக நடித்ததாகவும் அக்காட்சிகளை சமூக ஊடகங்கள், ஆபாச தளங்களில் வெளியிட்டு வருமானம் ஈட்டியதாகவும் சமூக ஆர்வலர் மார்ட்டின் மெனச்சேரி என்பவர், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தார். […]

துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் அதிரடி ரெய்டு..

சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்கத் துறை அதிகாரிகள் ‘நும்​கோர்’ என்ற குறி​யீட்​டுப் பெயரில் நாடு தழு​விய நடவடிக்கை மேற்கொண்​டுள்​ளனர். இதில், கேரளா முக்​கிய கவனம் பெற்​றுள்ள நிலை​யில் இம்​மாநிலத்தில் திருவனந்த​புரம், எர்​ணாகுளம், கோட்​ட​யம், கோழிக்​கோடு, மலப்புரம் ஆகிய மாவட்​டங்​களில் 30 இடங்களில் அதி​காரிகள் சோதனை நடத்​தினர். நடிகர்​கள் துல்​கர் சல்மான், பிருத்​வி​ராஜ் சுகு​மாரன் மற்​றும் தொழில​திபர்​களின் வீடு​கள் மற்​றும் முக்​கிய கார் ஷோரூம்​களி​லும் இந்த சோதனை நடை​பெற்​றது. இந்த […]

ஆபாசமாக சித்தரிப்பு: நடிகை ஐஸ்வர்யாராய் வழக்கு..

அறிவியல் வளர்ச்சி ஆக்கப்பூர்வமாகவும், நல்வழிப்படுத்தும் வகையிலும் அமைய வேண்டும். ஆனால், இன்றைய சூழலில் அது ஆபாசமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், இதோ ஓர் வழக்கு.. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதாகவும், அதை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவருடைய வழக்கறிஞர் சந்தீப் சேத்தி தாக்கல் செய்த வழக்கில், ‘மார்பிங் செய்யப்பட்ட ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் […]

வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. கோபி நயினார் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து, இபபடம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டு படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. […]