வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தை, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. கோபி நயினார் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து, இபபடம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்து உள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டு படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது.

இதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்க, திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி, படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் ‘மனுஷி’ படத்தில் சில காட்சிகளை நீக்குமாறு படக்குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்கவும், மாற்றி அமைக்கவும், வசனங்களை நீக்கி 2 வாரத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்புமாறும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘மனுஷி’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக்கோரி தயாரிப்பாளர் வெற்றிமாறன் தொடர்ந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் இவ்வாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

manushi film case high court action order
director vetrimaaraninvestigationmanushi movieஆண்ட்ரியாமனுஷி