Browsing tag

fans

ஷாருக்கானுக்கு பலத்த காயம், ஆஸ்பத்திரியில் அனுமதி: படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு..

பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான் நடிப்பில் ‘கிங்’ என்ற படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இப்படத்தில், ஷாருக்கானுடன் அவரது மகள் சுகானா கானும் நடிக்கிறார். ராணி முகர்ஜி சுகானாவின் தாயாராக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து கொண்டிருந்த நிலையில், படப்பிடிப்பில் காயமடைந்தார். ஒரு சண்டைக் காட்சியின்போது, இந்த விபத்து நடந்ததாகத் தெரிகிறது. ஷாருக்கான் டூப் இல்லாமல் நடித்ததாகவும், ரிஸ்க்கான ஸ்டண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில், அவருக்கு பலத்த […]

கவின் நடிப்பில் கிஸ், மாஸ், படங்களை தொடர்ந்து அடுத்த படப்பூஜை..

கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து கவின் நடிப்பில் அடுத்ததாக ‘கிஸ்’ வெளியாகவுள்ளது. மேலும், வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து கவினின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அவரது அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளன. ‘தண்டட்டி’ படத்தை இயக்கிய ராம் சங்கையா இயக்கவுள்ளார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘தண்டட்டி’ படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் […]

‘தலைவன் தலைவி’ படத்தின் கதை என்ன?: இயக்குநர் பாண்டிராஜ் அப்டேட்ஸ்..

‘தலைவன் தலைவி’ படத்தின் கதைக்களம் குறித்துப் பார்ப்போம்.. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’தலைவன் தலைவி’. இப்படம் ஜூலை 25-ந்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், படம் குறித்து பாண்டியராஜ் தெரிவிக்கையில், ‘தலைவன் தலைவி’ படத்தில் விவாகரத்து குறித்து பேசியிருக்கிறோம். இன்று விவகாரத்து அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏன் என்ற கேள்வி தான் இந்தக் கதை. விவகாரத்து பெறுவதற்கு எண்ணம் இருந்தாலோ, நீதிமன்றத்துக்கு சென்றிருந்தாலோ இந்தப் படம் பார்த்தவுடன் விவகாரத்து […]

சூர்யா பிறந்தநாளில், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45-வது படமான ‘கருப்பு’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் தனது 46-வது படத்தில் தற்போது இணைந்துள்ளார். இந்நிலையில், சூர்யாவின் 47-வது படத்தை பகத் பாசிலை வைத்து ‘ஆவேஷம்’ என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனரான ஜீத்து மாதவன் இயக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மோகன்லாலும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மோகன்லால், சூர்யாவுடன் ‘காப்பான்’ படத்தில் இணைந்து நடித்தார். தற்போது மீண்டும் ‘சூர்யா 47’ படத்தின் […]

கார்த்தி நடிப்பில் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகும் ‘மார்ஷல்’ பட அப்டேட்ஸ்..

கார்த்தி நடிக்கவுள்ள படத்துக்கு ‘மார்ஷல்’ என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை தமிழ் இயக்குகிறார். ‘சர்தார் 2’ படத்தை முடித்துவிட்டு, தமிழ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. இது பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் என்பதால், இதன் படப்பிடிப்புக்கான பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. மேலும், 1960-களில் ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமாக இது உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டன. இதற்கு ‘மார்ஷல்’ என தலைப்பிடப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது […]

‘கார்த்தி-29’ படத்தில் இணையும் நிவின் பாலி, பிரபு..

‘கார்த்தி-29’ பட தகவல்கள் பார்ப்போம்.. விக்ரம் பிரபு நடிப்பில் ‘டாணக்காரன்’ படத்தினை இயக்கியவர் தமிழ். இவர் தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில், மலையாள நடிகர் நிவின் பாலி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ படத்தில் வில்லனாக நடிக்கும் இவர், தற்போது கார்த்தியின் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில், ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷனும் மற்றும் பிரபுவும் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘கார்த்தி 29’ படத்தில் […]

கடந்தகால தோல்விகளை வைத்து, இயக்குநரை எடை போடுவதில்லை: விஜய் சேதுபதி பேச்சு..

விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் தபு, சம்யுக்தா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது தொடர்பாக விஜய் சேதுபதி தெரிவிக்கையில், ‘எனக்கு கதைப் பிடித்திருந்ததால் நடிக்கச் சம்மதிக்கிறேன். ஓர் இயக்குநரின் கடந்த கால தோல்விகளை வைத்து, அந்த இயக்குநரை எடை போடுவதில்லை. அப்படி ஏன் மதிப்பிட வேண்டும்? பூரி ஜெகன்நாத் இயக்கும் படம் முழுவதும் ஆக்‌ஷனை கொண்டது. இதற்கு முன் இப்படியொரு படத்தில் […]

கமல்ஹாசனுக்கு, ஆஸ்கர் விருது அகாடமி அழைப்பு

ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆயுஷ்மான் குரானா மற்றும் கமல்ஹாசனை வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைத்துள்ளது. அனைத்து பிரபலங்களும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால், அகாடமியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 11,120 ஆக உயரும். இதில் 10,143 வாக்களிக்கும் உறுப்பினர்கள் அடங்குவர். அமெரிக்காவிற்கு வெளியே 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அழைப்பாளர்கள், அகாடமியின் அதிகரித்து வரும் சர்வதேச கண்ணோட்டத்திற்கு பங்களிக்கின்றனர். இந்த மதிப்புமிக்க கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை அகாடமியில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டின் […]

ரசிகர்களுக்கு ஸ்ருதிஹாசன் வைக்க வேண்டுகோள்.. என்ன விஷயம் தெரியுமா?

ரசிகர்களுக்கு ஸ்ருதிஹாசன் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கும் நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார். அதாவது தனது ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து விட்டனர் என்றும் அதில் போடும் போஸ்ட் நான் போடுவது அல்ல அதனால் யாரும் தொடர்பு […]

படம் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும்? ரசிகர்களிடம் விட்டுவிடுங்கள் : கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்..!

படம் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும் ரசிகர்களிடம் விட்டுவிடுங்கள் என பேசி உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ்.அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட ,மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவரது இயக்கத்திலும் சூர்யா நடிப்பிலும் வெளியான திரைப்படம் ரெட்ரோ இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் […]