‘கார்த்தி-29’ பட தகவல்கள் பார்ப்போம்..
விக்ரம் பிரபு நடிப்பில் ‘டாணக்காரன்’ படத்தினை இயக்கியவர் தமிழ். இவர் தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில், மலையாள நடிகர் நிவின் பாலி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ படத்தில் வில்லனாக நடிக்கும் இவர், தற்போது கார்த்தியின் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இப்படத்தில், ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷனும் மற்றும் பிரபுவும் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘கார்த்தி 29’ படத்தில் நானி கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, வெளியான ‘ஹிட் 3’ படத்தில் கார்த்தி கிளைமேக்ஸ் காட்சியில் தோன்றி இருந்தார். இதனையடுத்து, தற்போது நானி ‘கார்த்தி 29’ படத்தில் நடிக்கவுள்ளார். கடற்கொள்ளையர்கள் குறித்தான கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.
பீரியட் பிலிமாக மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் தயாராக இருக்கிறது. சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் செட் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து காரைக்கால், ராமேஸ்வரம் உள்ளிட்ட கடற்சார்ந்த பகுதிகளில் ஷுட்டிங் நடக்க இருக்கிறது.