Browsing tag

fans

பிரபுதேவா-வடிவேலு இணையும் புதிய படத்தின் அப்டேட்ஸ்..

பார்த்திபன், சுந்தர்.சி, அர்ஜுன், பிரசாந்த் ஆகியோருடன் இணைந்த வடிவேலு காமெடி காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை. அவ்வகையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கோலகலமாக நடைபெற்றது. இதில் லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன், ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் உள்பட பலர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தமிழ்த் […]

சச்சின், டோனியையே விமர்சனம் செய்யும்போது இவனென்ன: சிவகார்த்திகேயன் ஃபீலிங்ஸ்..

சிவகார்த்திகேயன் கேரியர் ‘அமரன்’ படத்திற்கு பிறகு மாஸாகி விட்டது. தற்போது மதராஸி, பராசக்தி என முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்து வருகிறார். அவ்வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படம் செம்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், சமீபமாக இணையத்தில் பெரும் கிண்டலுக்கு ஆளாகி வந்தார் சிவகார்த்திகேயன். ஏனென்றால் சிறிய படங்களில் எந்தவொரு படம் நன்றாக இருந்தாலும், அப்படக்குழுவினரை அழைத்து பாராட்டி வந்தார். இதுவே நாளடைவில் இணையத்தில் கிண்டலாக மாறியது. ‘கூலி’ வெளியான அன்று கூட பலரும் சிவகார்த்திகேயன், ரஜினியை அழைத்து […]

சன்னிலியோன் நடித்த படத்தில், கிளாமர் கதாபாத்திரத்தில் தமன்னா..

ஹாலிவுட்டில் வெளியான ‘பாராநார்மல் ஆக்டிவிட்டி’ என்ற சூப்பர் நேச்சுரல் ஹாரர் படத்தின் பாதிப்பில் இந்தியில் உருவான படம், ‘ராகிணி எம்எம்எஸ்’. ராஜ்குமார் ராவ், கைனஸ் மோடிவாலா ஆகியோர் நடித்திருந்தனர். 2011-ல் வெளியான இந்தப் படத்தை பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படம், வெற்றி பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் 2014-ல் வெளியானது. சன்னி லியோன் நாயகியாக நடித்த இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து அதன் 3-ம் பாகம் இப்போது உருவாகிறது. இதில் தமன்னா, கிளாமருடன் கூடிய […]

ராஜமௌலி-மகேஷ்பாபு படத்தின் போஸ்டர் வெளியீடு எப்போது?

ராஜமௌலி இயக்கத்தில் மபேஷ்பாபு நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி, ஒரிசாவில் நிறைவடைந்துள்ளது. சமீபத்தில், படத்தின் முக்கிய காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டன. தற்போது, அடுத்த கட்ட படப்பிடிப்பு நைரோபியில் நடத்த படக்குழு தயாராகி வருகிறது. மகேஷ் பாபுவும், பிரியங்கா சோப்ராவும் கென்யாவின் நைரோபியை அடைந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 9-ந்தேதி அன்று மகேஷ் பாபுவின் பிறந்தநாளுக்கு, ரசிகர்கள் படத்தின் முதல் பார்வை அல்லது க்ளிம்ப்ஸ் வெளியாகும் என எதிர்பார்த்தனர். ஆனால், வெளியாகவில்லை. இந்நிலையில், […]

7 மாதங்களுக்கு பிறகு, மீண்டு வரும் டைகர்: மம்முட்டிக்கு, மஞ்சு வாரியர் வரவேற்பு..

தமிழ் சினிமாவில் அழகன், மறுமலர்ச்சி, கிளிப்பேச்சு கேட்க வா, தளபதி போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி என்பது தெரிந்ததே. தற்போது மம்முட்டி, மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 7 மாதத்துக்கு முன், இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, மம்முட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனால், படப்பிடிப்பில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும் […]

முட்டாள்தனமாக பேசியதற்கு, இப்போது வருந்துகிறேன்: நடிகை மிருணாள் தாக்கூர் பக்குவம்..

நடிகை மிருணாள் தாக்கூர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர், தனுஷை காதலிப்பதாகச் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அதை அவர் மறுத்திருந்தார். இந்நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார், மிருணாள். சில வருடங்களுக்கு முன் நடிகை பிபாஷா பாசு பற்றி அவர் பேசிய வீடியோ, இப்போது வைரலானது. அதில், ‘நான் பிபாஷா பாசுவை விட, நன்றாக இருக்கிறேன். ஆண்களைப் போல தசைகளைக் கொண்டவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமா? பிபாஷா பாசு இருக்கிறார்’ என […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் கதைக்களம் என்ன தெரியுமா?

விக்ரம் பிரபு, அக்‌ஷய் ஆகியோர் நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. நாயகியாக அனந்தா இணைந்துள்ளார். இதன் கதையினை ‘டாணாக்காரன்’ தமிழ் எழுத, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படத்தின கதை உருவாக்கப்பட்டு உள்ளது. தற்போது படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ‘சிறை’ என பெயரிடப்பட்டு, இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். ஒரு […]

நானி நடிப்பில், கலகக்காரன் தலைவனாகும் கதை: 8 மொழிகளில் வெளியாகிறது..

நானி நடித்து வரும் ‘த பாரடைஸ்’ படத்தை ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்குகிறார். ‘தசரா’ படத்துக்குப் பிறகு இருவரும் இதில் இணைந்துள்ளனர். எஸ்எல்வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகுரி தயாரித்துள்ளார். அனிருத் இசையமைக்க, சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு செய்கிறார். ராகவ் ஜூயல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். . முன்னதாக வெளியான இப்படத்தின் டீசர் தெரிவிக்கையில், ‘வரலாற்றில், எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஒரே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு […]

விஜய் தனது முடிவை மறுபரிசீலனை செய்வாரா?: இயக்குநர் லோகேஷ் ஆர்வம்..

மாஸ்டர்-2, லியோ-2 படங்கள் உருவாகும் வாய்ப்புண்டா? என காண்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக ‘லியோ’ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ படங்களில் இடம்பெறுகிறது. தற்போது ‘மாஸ்டர் 2’ மற்றும் ‘லியோ 2’ குறித்து பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில் ‘மாஸ்டர் 2’ படத்தின் ஐடியாவை விஜய் சாரிடம் கூறினேன். அப்படம் ரொம்பவே ஜாலியாக இருக்கும். ஏனென்றால், ஜே.டி கதாபாத்திரம் […]

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் கலெக்‌ஷன் விவரம்..

‘கிங்டம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விமர்சனங்கள் சற்று கலவையாக வந்தாலும், விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ட்ரீட் ஆக அமைந்துள்ளது. இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.31 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டாவின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் கிங்டம் படைத்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் கிங்டம் […]