Browsing tag

தனுஷ்

இட்லி கடை படம் எப்படி இருக்கு?எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விமர்சனம்.!!

இட்லி கடை படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். […]

இட்லி வாங்க காசில்லையா?: விமர்சனங்களுக்கு தனுஷ் விளக்கம், வைரல்..

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய ஊர்களைத் தொடர்ந்து திருச்சியிலும் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தனுஷ், அருண் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மதுரையில் நடைபெற்ற நிகழ்வின்போது, இட்லி வாங்கி சாப்பிடவே கஷ்டப்பட்டதாக தனுஷ் பேசியிருந்தார். இந்த விவகாரத்தை இணையத்தில் பலரும் கிண்டலுக்கு உள்ளாக்கினார்கள். பலரும் வருடத்தைக் குறிப்பிட்டு இவர் […]

வடசென்னை 2 படம் குறித்து அப்டேட் கொடுத்த தனுஷ்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இரண்டாம் பாகம் குறித்து ஆவலோடு ரசிகர்கள் காத்திருந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஷ் இந்த படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது வடசென்னை 2 திரைப்படம் […]

தனது ரசிகர்கள் குறித்து தனுஷ் பெருமிதமாய் பேச்சு..

தன்னுடைய ரசிகர்கள் குறித்து தனுஷ் தெரிவித்த தகவல்கள் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘இட்லி கடை’ என்பது தெரிந்ததே. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் சத்யராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினருடன் தனுஷும் கலந்து கொண்டார். இதில் அனைவருமே தனுஷின் இயக்கத்தைப் பற்றி பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். இந்த விழாவில் தனுஷ் பேசும்போது, ‘எனக்கு சமையல் கலை நிபுணராக வேண்டும் என்று தான் ஆசை. அந்த ஆசையினாலோ என்னவோ […]

ஆஸ்கர் விருதுக்கு செல்கிறது, தனுஷ் நடித்த ‘குபேரா’ படம்..

‘குபேரா’ திரைப்படம் தெலுங்கில் வரவேற்பு பெற்ற அளவிற்கு தமிழில் வரவேற்பு பெறவில்லை. இருப்பினும் தனுஷின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. தற்போது இப்படம் ஆஸ்கர் செல்கிறது. திரையுலகிலேயே மிகவும் உயரிய விருது ஆஸ்கர். இந்தியளவில் மட்டுமல்லாமல் உலகளவில் இருக்கும் கலைஞர்கள் அனைவரின் கனவும் ஆஸ்கர் விருது வாங்கவேண்டும் என்பது தான். இதுவரை, இந்தியாவிலிருந்து ஏ.ஆர். ரகுமான், ஆர்.ஆர்.ஆர். படத்திற்காக கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் இவ்விருதை வாங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் பலர் இந்திய திரையுலகின் சார்பாக ஆஸ்கர் […]

தனுஷின் மகன் லிங்காவுக்கு ஒரு லவ் ஸ்டோரி: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

பன்முகத் திறமையாளரான தனுஷ் இயக்கத்தில் அக்டோபர் 1-ந்தேதி திரைக்கு வரவிருக்கும் படம் இட்லி கடை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல்கள் தற்போது வலைதளங்களில் பேச்சாக உள்ளது. இந்நிலையில் தனுஷ் பற்றி ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் வீடியோவை ரசிகர்கள் விரும்பி ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது பாசிட்டிவான மீம்ஸ். அதாவது, தன் பட விழாக்களுக்கு வெள்ளை வேட்டி, சட்டையில் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தனுஷ். அப்படி இருக்கும்போது ‘இட்லி கடை’ இசை வெளியீட்டு விழாவுக்கும் […]

நாம் வந்த வழியை மறக்கக்கூடாது: ‘இட்லி கடை’ படம் குறித்து தனுஷ்..

பன்முகத் திறமையாளரான தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அக்டோபர் 1-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படம் குறித்து தனுஷ் தெரிவிக்கையில், ‘அதென்ன இட்லி கடை? இதைவிட சக்தி வாய்ந்த தலைப்பை வைத்திருக்கலாமே’ என்று சிலர் கேட்கிறார்கள். சில படங்களில் ஹீரோவின் பெயரையே […]

தனுஷ் நடித்த படங்களில் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு பிடித்த படங்கள் என்ன தெரியுமா? அவரே சொன்ன தகவல்.!!

தனுஷ் நடித்த படங்களில் இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு பிடித்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்கி நடித்துள்ள இட்லி கடை என்ற திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வளர்ந்து வரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் தனுஷ் […]

‘இளைய சூப்பர் ஸ்டார்’ பட்டம்: தனுஷின் உடனடி நடவடிக்கை; வைரல்..

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பட்டம் கொடுத்து அழைப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான நிகழ்வு என்பது தெரிந்ததே. அவ்வகையில், பல நடிகர்கள் உண்டு எனலாம். இது குறித்து தற்போது வைரலாகும் நிகழ்வு பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் பன்முகத்திறமையாளர் தனுஷ். இவரது இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1-ந்தேதி வெளியாகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடைசியாக தனுஷின் நடிப்பில் வெளியான ‘குபேரா’ திரைப்படம் தெலுங்கில் வரவேற்பை நிலையில், தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. முன்னதாக, ஓர் […]

இட்லி கடை படத்தின் கதை என்ன தெரியுமா? லீக்கான ஸ்டோரி..!

இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார்.அந்த வகையில் நடிகர் தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை இந்த திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரன், சமுத்திரகனி, ஷாலினி பாண்டே, நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் […]