வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா-46’ படம் பூஜை; ஹீரோயின் யார் தெரியுமா?

சூர்யாவை விட 27 வயது இளையவர் அவருக்கு ஜோடியாகி உள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்..

சூர்யா நடிக்கும் 46-வது படத்தை வெங்கி அட்லூரி இயக்க, சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘பிரேமலு’ பட நாயகி மமிதா பைஜு கமிட் ஆகியுள்ளார்.

மமிதா பைஜுவை விட சூர்யா 27 வயது மூத்தவர். கிட்டத்தட்ட சூர்யா தன் மகள் வயது நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். மேலும், இப்படத்தில் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

‘ரெட்ரோ’ பட வெற்றிக்கு பின்னர் சூர்யா- ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவாகும் ‘சூர்யா-45’ படத்தின் ஷுட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா மீண்டும் இணைந்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

suriya46 pooja ceremony photos with mamitha baiju
actor suriyaactress mamitha baijuretro movieஆர்.ஜே பாலாஜிமமிதா பைஜு