சூர்யா 47 படத்திற்கு ‘சீன்’ என டைட்டில் அறிவிப்பு

ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படத்திற்கு ‘சீன் (SCENE)’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகியுள்ளது.

‘சீன்’ திரைப்படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வினித் அகஸ்தியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை அஜ்மல் ஷபு மேற்கொள்ள, கலை இயக்குநராக அஸ்வினி காலே பணியாற்றியுள்ளார்.

காமெடி மற்றும் ஆக்‌ஷன் கலந்த என்டர்டெய்னராக உருவாகி வரும் இப்படத்தை ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தயாரித்துள்ளனர். ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

- Advertisement -

தற்போது படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘சீன்’ டைட்டில் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் சூர்யா இன்பராஜ் ஐபிஎஸ் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விதம், அவரது திரை ஆளுமை, வசனங்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘சீன்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வரும் சூர்யா, ‘சீன்’ திரைப்படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

AnandrajLalNaslenNazriya NazimRaj PriyanSCENEsuriyaSuriya 47Suriya 47 Titled SCENE