சூர்யா 45 படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். மேலும் சுவாசிக்கா, யோகி பாபு, நட்டி நடராஜ், சுப்ரீத் ரெட்டி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் லேட்டஸ்ட் தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார்.
அதாவது சூர்யா 45 படத்தின் இசையமைக்கும் பணிகள் சூப்பராக நடந்து கொண்டிருப்பதாகவும் சூர்யா சாரை சின்ன வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் இது ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் ஏ ஆர் ரகுமான் மற்றும் அனிருத்துடன் நான் முன்பு வேலை செய்திருப்பதால் எனக்கு பிஜிஎம் பண்றது ரொம்பவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு “வேட்டை கருப்பு”என டைட்டில் வைக்க போவதாக ஏற்கனவே தகவல் ஒன்றும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.