ஜெயிலர் 2 குறித்து லேட்டஸ்ட் அப்டேட் பகிர்ந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது
நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தில் பகத் பாசில் மோகன்லால்,எஸ் ஜே சூர்யா போன்ற பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்
இந்த நிலையில் ஜெயிலர் , 2 படப்பிடிப்பு முடித்துவிட்டு திரும்பிய ரஜினியிடம் படம் குறித்து கேள்வி கேட்டுள்ளனர் அதற்கு அவர் அடுத்த வருடம் ஜூன் மாதம் ஜெயிலர் 2 வெளியாகும் என மிகப் பெரிய அப்டேட்டை கொடுத்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.