ஜெர்மனியில் ட்ரடிஷனல் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது வெகுளித்தனமான பேச்சில் ரசிகர்களை கவர்ந்திருந்தார். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று விதவிதமான டிஷ்களை சமைத்துக் கொடுத்து நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார்
தற்போது ஆன்கராகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் சிவாங்கி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
விதவிதமான போட்டோ சூட் மற்றும் வித்தியாசமான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஜெர்மனியில் ட்ரடிஷனல் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.