பஞ்சாபி பெண்ணான சோனியா அகர்வாலுக்கு தொடர்ந்து தன் படங்களில் வாய்ப்பு கொடுத்து வந்தார் செல்வராகவன். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு 2006-ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தார்கள். திருமண வாழ்க்கை நிலைத்து நிற்காமல் 2010-ம் ஆண்டு செல்வராகவன், சோனியா அகர்வாலுக்கு விவாகரத்து கிடைத்தது.
மீண்டும் நடிப்புக்கு திரும்பிவிட்டார் சோனியா அகர்வால். அம்மா, அக்கா, அண்ணி கதாபாத்திர நடிகையாகி விட்டார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா உள்ளிட்டோர் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் வெற்றி பெற்ற பிறகு தான், சினிமாவில் இருந்து விலகினார்.
‘புதுப்பேட்டை’ படத்தை தொடர்ந்து பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால், திருமணமாகி விட்டதால், இரண்டு வாய்ப்புகளையும் சோனியா அகர்வால் ஏற்கவில்லை. அந்த வாய்ப்புகள் வேறு நடிகைகளுக்கு கிடைத்து பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர். ஆகிய இருவரின் படங்களும் வெற்றி பெற்றன.
அந்த படங்களில் மட்டும் சோனியா அகர்வால் நடித்திருந்தால், அவரின் கெரியர் மேலும் உச்சம் தொட்டிருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை. திருமணத்தால் தன் வாழ்க்கை தடுமாறிவிட்டது என்கிறார் சோனியா அகர்வால்.
தானாக தேடி வந்த இரண்டு ஹிட் படங்களிலும் நடித்திருந்தால், தன் வாழ்க்கை இந்நேரம் வேறு மாதிரி இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
தற்போது, அவர் தமிழ் படங்களுடன் தெலுங்கு, மலையாளத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். ‘குயின்’ வெப்தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் சிறப்பாக நடித்தாலும் முன்பு போன்று அவரின் கெரியர் இல்லாத்து சோனியாவை கவலை அடைய செய்திருக்கிறது.
முன்னதாக விவாகரத்து முடிவு எடுக்கப்பட்டபோது செல்வராகவன், சோனியா அகர்வால் பிரிந்துவிடக் கூடாது என்று அவர்களிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து சோனியா அகர்வாலுக்கு விவாகரத்து நடந்துவிட்டது.