மதராசி படக்குழுவை பாராட்டி இயக்குனர் சங்கர் பதிவு வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்த நிலையில் மேலும் ருக்மணி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன் ,டான்சிங் ரோஸ், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்
மேலும் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இந்த படம் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் பல சுவாரசியமான நாடக தருணங்களை கொண்ட ஒரு கவர்ச்சிகரமான வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படம் ஆக மதராசி திரைப்படம் இருப்பதாகவும் மேலும் முருகதாஸ் உணர்ச்சிகளை அற்புதமாக இணைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இருப்பதாகவும் ஒரு அதிரடி ஹீரோவாக பிரம்மிக்க வைக்கிறார் என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.