‘அமரன்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் திரை லைஃப் ஸ்டைல் மாஸாகி விட்டது என்பது தெரிந்ததே.
இதனைத் தொடர்ந்து, முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் ஹீரோவாக ‘மதராஸ்’ மூலம் அவதாரம் எடுத்தார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக அவர் நடித்து வரும் ‘பராசக்தி’ படமும் ஒரு சீரியஸான படம். பிறகு டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படமும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகின்றது.
இவ்வாறு சிவகார்த்திகேயன் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி மிரட்டி வருவது அனைத்து விதமான ரசிகர்களுக்கும் பிடித்துள்ளது. ஆனாலும் ஒரு சில ரசிகர்கள், இனி சிவகார்த்திகேயன் படங்களில் காமெடியெல்லாம் இருக்காதா? முன்புபோல காமெடி படங்களில் சிவகார்த்திகேயன் இனி நடிக்கமாட்டாரா? எனவும் கேட்டு வருகின்றனர்.
அவரின் காமெடி படங்களுக்கு என்றே தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன் என அவரின் காமெடி படங்கள் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கின்றது. இனி, அவரிடம் இருந்து முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தை எதிர்பார்க்க முடியாது.
இன்னும் ஒரு சில வருடங்களில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து இதேபோல வித்தியாசமான படங்களாக நடித்து வந்தால், அவரின் ரேன்ஜ் செம மாஸாக சென்று விடும்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘பராசக்தி’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாக, பராசக்தி படம் பொங்கலன்று ஜனவரி 14-ந்தேதி ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
sivakarthikeyan fans about his movie story selections