முத்துவும் மீனாவும் சந்தோஷமாக இருக்க, ரோகினி வருத்தப்பட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க பார்வதி அவரை பார்க்க வருகிறார் பிறகு மீனாவை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி வர மீனா படுத்துக் கொண்டிருக்கிறார் பார்வதி மீனாவைப் பார்த்து இவ்வளவு பெரிய அடிபட்டு இருக்கே மீனா என்று சொல்ல இல்ல ஆன்டி அடிபட்டதை விட என் தங்கச்சி சீட்டு போட்டு வச்ச காசு தொலைச்சிட்டேன் அதுதான் எனக்கு மனசு கஷ்டமா இருக்கு என்று சொல்லுகிறார். உனக்கு இவ்வளவு முடியலன்னு தெரிஞ்சிருந்தா பழங்கள் வாங்கிட்டு வந்து இருப்பேன்னு சொல்லு பரவால்ல ஆன்ட்டி நீங்க வந்து பார்த்ததே எனக்கு 100 ஆப்பிள் சாப்பிட்ட மாதிரி சந்தோஷமா இருக்கு என்று சொல்ல முத்து கூட சேர்ந்து நீயும் நல்லா பேச ஆரம்பிச்சிட்டியா சரி ரெஸ்ட் எடு நான் விஜயா கிட்ட போய் பேசுறேன்னு சொல்லி வருகிறார்.
இவர்கள் இருவரும் ஒக்காந்து பேசிக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை நகை கேட்ட விஷயத்தை பார்வதி இடம் விஜயா சொல்ல அதற்கு பார்வதி எனக்கு என்னமோ அந்த சிந்தாமணி மேல தான் சந்தேகமா இருக்கு என்று சொல்ல விஜயாவின் முகம் மாறுகிறது. ஏன்னா அவங்க ஆளே சரியில்ல ஏற்கனவே மீனா தொழில விட்டு துரத்தலும் விரட்டணும் என்று பேசிகிட்டு இருந்தாங்க எனக்கு என்னமோ அவங்க உன்கிட்ட டான்ஸ் கிளாஸ் சேர்ந்தது மீனாவ பழிவாங்க தான தோணுது அப்புறம் உனக்கு தான் அந்த பாவம் எல்லாம் வரும் மீனா உயிருக்கு எந்த ஆபத்து வரக்கூடாதுன்னு சொல்லு என்று சொல்ல விஜயா யோசிக்கிறார். மறுபக்கம் முத்து மண்டபத்திற்கு செல்வத்துடன் வந்து மேனேஜரை விசாரிக்க, நான் கடைசி நிமிஷம் வரைக்கும் பார்த்தேன் பா மீனா வரல அவங்களுக்கு அடிபட்டுருச்சுன்னு கேள்விப்பட்டேன் என சொல்ல முத்து அவர்கள் பணம் எடுத்துக்கிட்டு தான் வந்தாங்க வழியில திருடிட்டு போயிட்டாங்க என்று சொல்லுகிறார்.
உடனே கொஞ்ச நேரத்தில் இந்த ஆடர் யார் வாங்கி இருக்காங்க என்று கேட்க அதெல்லாம் எதுக்குப்பா கேட்கிறேன் என்று சொல்லுகிறார் என் பொண்டாட்டி கூட வேலை செய்றவங்கள சேர்த்து விடுவதற்கு என்ன சொல்லி சமாளித்து சிந்தாமணி வாங்கிய விஷயத்தையும் அவங்க தான் மீன வர மாட்டாங்க அவங்களுக்கு அடிப்பட்டுச்சுன்னு சொன்னாங்க அதனாலதான் அந்த ஆர்டர் அவங்களுக்கு கொடுத்தேன் இல்லனா மீனாவுக்கு தான் கிடைச்சிருக்கும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். முத்துவும் செல்வமும் வெளியில் வந்து இப்ப புரியுதா யாரு செஞ்சி இருப்பாங்க என்று முத்து கேட்க செல்வம் ஆனால் சிந்தாமணி மட்டும் செஞ்ச மாதிரி தெரியல மீனா பணத்தோட தனியா வரத்தை யாரோ சொல்லி இருக்காங்க என்று சொல்ல எனக்கு அந்த சந்தேகம் இருக்கு பணம் போனது கூட பிரச்சனை இல்லை மீனாவ தள்ளிவிட்டு இருக்காங்க ஏதாவது பிரச்சனையா இருந்தா என்ன பண்றது என்னால யோசிச்சு கொடு பார்க்க முடியாது இதுல சம்பந்தப்பட்டவங்கள நான் சும்மா விட மாட்டேன் சொல்லிவிட்டு காரில் சென்று விடுகிறார்.
மறுபக்கம் மீனா வீட்டில் பூ கட்டிக் கொண்டிருக்க விஜயா இப்ப கூட எதுக்கு பணம் சம்பாதிக்கிறதுல முக்கியமா இருக்க என்று பேசிக்கொண்டு இருக்க முத்து வந்துவிடுகிறார் உடனே விஜயாவின் வாயை அடக்கி அனுப்பி விட, மீனாவின் பக்கத்தில் உட்கார்ந்து எதுக்கு மீனா கை வலிக்க கட்டிக்கிட்டு இருக்க என்று கேட்க இல்லைங்க இந்த மாலை கட்டிக் கொடுத்தா அவங்களுக்கு புடிச்சி இருந்ததுனா மண்டபம் ஆர்டர் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்காங்க என்று சொல்ல உடனே முத்து சந்தோஷப்படுகிறார். இந்த ஆர்டர் கிடைக்காம போயிரும் சொல்லுங்க அதுக்கு பேரு மனசு வெறுத்துவிட்டு இருப்பாங்க ஆனால் நீ அடுத்த ஆர்டர்காக தன்னம்பிக்கையா வேலை செய்வதற்காக ரொம்ப சந்தோஷமா இருக்கு இது கொண்டாடனும் மீனா என்று சொல்லி பூவை எடுத்து மீனா மீது போட்டு கொண்டே இருக்கிறார் ரோகிணி இதை கவனித்துவிட்டது ரூமுக்கு சென்று அவங்க ரெண்டு பேரும் இவ்வளவு சந்தோஷமா இருக்காங்க இந்த ரூம்ல சிரிப்பு சத்தம் கேட்டு ரொம்ப நாள் ஆகுது என்று சொல்கிறார்.
மறுபக்கம் மனோஜ் பண்ணி திறந்து பார்த்துவிட்டு அவன் எதுக்கு இப்படி லூசு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கான் என்று சொல்ல அவங்களுக்குள்ள எவ்வளவு சண்டை வந்தாலும் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள் என்ற ரோகினி சொல்ல அதற்கு மனோஜ் அவ கூட எல்லாம் என்னை கம்பேர் பண்ணாத என்று சொல்லுகிறார். உன்னை எவ்வளவு நாளைக்கு மனோஜ் இதே மாதிரியே இருக்க போறேன் என்று கேட்க நீ பண்ண தப்பு அப்படி என்று சொல்லுகிறார். இன்னும் நான் எத்தனை வாட்டி சாரி கேட்கணும் என்று சொல்ல இங்க இருக்குற கண்ணாடி உடைச்சுட்டு அது கிட்ட சாரி சொன்னா அது ஓட்டிடுமா என்று மனோஜ் கேட்டுவிட்டு படுத்து வருகிறார்.
மறுபக்கம் விஜயா சத்தம் கேட்டதும் கதவை திறந்து பார்க்க முத்து,மீனா பூ போட்டு விளையாடிக் கொண்டிருப்பதை கவனித்து அண்ணாமலையை கூப்பிட்டு காட்டுகிறார் அவர் சந்தோஷப்பட்டு கதவு சாத்திட்டு வா சின்ன சிறுசா விளையாடிட்டு இருக்காங்க அதையே பாத்துக்கிட்டு இருக்க என்று கேட்க அவங்களுக்கு என்ன இந்த வயசுல விளையாட்டு அவங்க என்ன சின்ன பசங்களா என்று கேட்க தண்ணீர் பாட்டிலே கையில் கொடுத்துவிட்டு படுத்து விடுகிறார் அப்போ எனக்கு வயித்தெரிச்சல் என்று சொல்றீங்களா என்ன கேட்க அண்ணாமலை அமைதியாக படுத்து விடுகிறார். உடனே ஸ்ருதி ரவி வர, அவர்கள் என்ன சொல்லுகின்றன? அதற்கு முத்து மீனாவின் பதில் என்ன? அருண் பணம் விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.