அண்ணாமலைக்கு திருமணம் நடக்க விஜயா அடைந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து எமன் கெட்டப்பில் வந்து விஜயாவை அலார விட்டுக் கொண்டிருக்க அண்ணாமலை வந்து என்ன முத்து இதெல்லாம் என்று கேட்கிறார். என்னப்பா நீ உங்க கூட எப்படி பயந்துட்டு இருந்த நீங்க வந்து கண்டுபிடிச்சிட்டீங்க என்று சொன்ன என் பையனை எனக்கு தெரியாதா என்று கேட்கிறார் உடனே முத்துவை விஜயா உத்து பார்த்துவிட்டு பாருங்க என்னை எப்படி பயமுறுத்தி இருக்கான் என்று சொல்லுகிறார்.
பிறகு நடந்த விஷயங்களை மட்டும் சொல்ல கொஞ்ச நேரத்தில் ஒரு ஆள் வந்து அப்பாகிட்ட கெட்டப்ப காட்டிட்டு வரேன்னு சொல்லு டைம் ஆவது டிரஸ் வாடகைக்கு திருப்பிக் கொடுக்கணும் என்று சொல்லு வாங்கி செல்ல வருகிறார். பிறகு முத்து மீனாவிடம் கெட்டப் எப்படி இருந்துச்சு நான் எப்படி பேசணும் எதுவுமே சொல்லல என்று சொல்ல எனக்கு அப்பவே நீங்க தான் இருப்பீங்கன்னு நீங்க நல்லா தான் நடிக்கிறீங்க பேசாம நடிக்கிறது மெயின் ஆகிட்டு கார் ஓட்டுவது சைடு பிசினஸ் ஆகிடுங்க என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் நான் எப்பவுமே கார் ஓட்டுவது தான் கரெக்ட்டா இருக்கும் என்று சொல்லுகிறார். எனக்கு இந்த கெட்டப் போட்ட உடனே ஒருத்தனை தான் ஞாபகம் வந்தது அந்த அருண் மேல பாச கயிறு வீசி எப்படி இருக்கு என்று சொல்ல வர மீனா கோபப்படுகிறார் இல்ல மீனா சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் என்று சொல்ல அப்ப கூட அப்படி பேசாதீங்க என்று சொல்லுகிறார்.
ஒருத்தவங்கள அழிக்கணும்னு நினைக்கிறது புண்ணியம் கிடையாது பாவத்துல தான் வந்து சேரும் என்று சொல்ல இது மட்டுமில்லாமல் ஆசைப்படுறவங்களை சேர்த்து வைக்காமல் இருப்பதும் பாவம் தான் என்று சொல்லுகிறார் அதற்கு முத்து நல்லவங்க ஆசைப்பட்டு சேர்த்து வைக்கலாம் கெட்டவங்க ஆசைப்பட்டு சேர்த்து வைக்கவில்லை என்றால் புண்ணியம் தான் என்று சொல்லிவிட்டு படுத்து விடுகிறார். விஜயா தூங்கிக் கொண்டிருக்க கதவை தட்டும் சத்தம் கேட்கிறது. வந்து திறந்து பார்த்தால் ஒரு எருமை மாடு நிற்க பக்கத்தில் எமதர்மராஜா இருக்க விஜயா பயத்தில் என்னை ரூம் பண்ணிடாத நான் எந்த பாவமும் பண்ணல என்று கெஞ்சுகிறார்.
ஆனால் எமன் விஜயா கழுத்தில் பாசக்கயிறு போட்டு இழுத்து விட விஜயா கீழே விழுந்து விடுகிறார். பிறகு இறந்து ஒரு வருடம் ஆனது போல அவரது போட்டோவை வைத்து அனைவரும் சாமி கும்பிடுகின்றனர். பிறகு பிள்ளைகள் மூவரும் சேர்ந்து அண்ணாமலை மனதை மாற்றி பரசுவின் உதவியோடு அவருக்கு திருமணமும் செய்து வைக்க பிறகு விஜயா அலறி அடித்துக் கொண்டு தாலி கட்டாதீங்க கட்டாதீங்க என்று கத்த அண்ணாமலை என்னாச்சு என்று கேட்கிறார். பிறகுதான் எல்லாமே கனவு என தெரிய வருகிறது.
அண்ணாமலை தண்ணி குடிச்சிட்டு படு என்று சொல்ல பயத்தில் விஜயா சிவப்பு சேலையை தேடி எடுத்து விட்டு கிச்சனுக்கு வேகமாக போக மீனா முழித்துக் கொள்கிறார். இவங்க என்னத்துக்குச் வேகமாக போறாங்க என்று சொல்ல முத்து விஷயத்தை சொல்லுகிறார் கொஞ்ச நேரத்தில் சிவப்பு புடவை மாற்றிக் கொண்டு விஜயா ரூமுக்கு சென்று விட இதுக்கு முன்னாடி வேற புடவை கட்டிக்கிட்டு இருந்தாங்க இப்ப என்ன சிவப்பு புடவை கட்டிக்கிட்டு போறாங்க என்று சொல்ல அவங்க ஏதோ ஒன்னு பண்ணட்டும் படு என்று சொல்லுகிறார். மறுநாள் காலையில் விஜயா சிவப்பு புடவையில் இருக்க ரோகிணி என்ன சொல்லுகிறார்? அண்ணாமலை என்ன செய்கிறார்? விஜயாவின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.