முத்து செய்த வேலையால் மீனா கோபமடைந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் நண்பர்கள் முத்துவை அழைத்துக் கொண்டு அருண் வீட்டுக்கு வந்து குடித்துவிட்டு அலப்பறை செய்ய அதனை அருண் வீடியோவாக எடுக்கிறார். மறுபக்கம் சத்யாவின் நண்பர் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்க சத்யா வந்தவுடன் எதுக்கு கான்ஸ்டபிள் வீட்டு முன்னாடி அலப்பறை பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு தெரியல என்று சொல்ல சத்தியா உடனே மீனாவுக்கு போன் பண்ணி நடந்த விஷயங்களை சொல்லுகிறார்.
சத்யா நான் போய் மாமாவ கூட்டிட்டு வரவா என்று கேட்க நீ வேணாம் விடு சத்யா நான் பாத்துக்குறேன் என்று சொல்லிவிடுகிறார். பிறகு அவர்கள் அங்கிருந்து கிளம்ப முத்து வீட்டுக்கு வர குடித்துவிட்டு இருப்பதை மீனா கவனித்து எதுக்கு குடிக்காத மாதிரி நடிக்கிறீங்க நீங்க குடிச்சிட்டு வந்தது எனக்கு தெரியும் என்று சொல்லுகிறார். நான் இப்பவே போய் மாமா கிட்ட சொல்றேன் என்று போக முத்து மீனாவை தடுக்கிறார். அப்பா ரொம்ப கஷ்டப்படுவாரு ஏற்கனவே லைசன்ஸ் போனதுல கஷ்டமா இருக்கும் இப்ப எதையும் சொல்லாத என்று சொல்ல தெரியுதுல அப்ப எதுக்கு இப்படி பண்றீங்க என்று கேட்கிறார் அந்த கார்த்திக் தான் ஏதோ போலீஸ்கிட்ட பேசி வாங்கி தரேன்னு சொல்லி போனா அப்புறம் பார்த்தா அது அருணோட வீடா இருக்கு என்று சொல்லுகிறார்.
அந்த இன்ஸ்பெக்டர் பேசி வாங்கி கொடுக்கிறேன்னு சொன்னாரு இப்ப இது மாதிரி பண்ணி வச்சுட்டு வந்து இருக்கீங்க இதனால் புதுசா என்ன பிரச்சனை ஆகப் போகுதுன்னே தெரியல ஏற்கனவே அந்த அருண் உங்க மேல கோவமா இருந்தாரு இப்ப இந்த கோபம் அதிகமாக இருக்கும் என்று சொல்ல முத்து லைசன்ஸ் போன விஷயத்தைப் பற்றி சொல்லுகிறார்.மீனா சாப்பிட கூப்பிட எனக்கு தான் வேலை வெட்டி இல்லையே தண்டசோறுக்கு சாப்பாடு என்று கேட்க அப்படி எல்லாம் பேசாதீங்க வாங்க எந்த பிரச்சினையா இருந்தாலும் சமாளிக்கணும் என்று சொல்லி சாப்பிட அழைத்துச் சென்று உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி விடுகிறார்.
சாம்பார்ல காரம் கம்மியா இருக்கு மீனா என்று சொல்ல குடிச்சிருந்தா அப்படி தான் தெரியும் எல்லா கரெக்டா தான் இருக்கு என்று சொல்லுகிறார் பிரச்சனை வந்தால் எப்படி சமாளிக்கணும்னு தான் பாக்கணும் குடிச்சிட்டு வந்தா சரியா போயிடாது என்று அட்வைஸ் பண்ணி கொண்டே ஊட்டி விடுகிறார்.
மறுநாள் காலையில் முத்து வீடு பெருக்கிக் கொண்டிருக்க விஜயா வந்து கவனித்து விட்டு சந்தோஷமாக சிரிக்க அண்ணாமலை மற்றும் மீனா வந்து நிற்க மீனா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க எதுக்கு நீங்க இதெல்லாம் பண்றீங்க என்று கேட்க நான் சும்மாதான் இருக்கேன் மீனா பரவால்ல நீயும் வேலைக்கு போற எவ்வளவு வேலை செய்வ அதுனால தான் பெருக்கினேன் என்று சொல்லிவிட்டு நான் துணி துவைக்க போறேன் உன்னோட ட்ரெஸ்ஸும் ஏதாவது இருந்தா எடுத்துட்டு வந்து கொடு என்று சொல்ல அதற்கு விஜயா சொல்றன்ல எடுத்துட்டு வா இதுக்கு தானே நீ ஆசைப்பட்ட என்று சொல்ல மீனா கோபமாக முத்துவின் கையில் இருப்போம் தொடப்பத்தை புடுங்கி விசிறி அடிக்க விஜயா பதறுகிறார். உடனே அண்ணாமலை இடம் அவை என்ன எவ்ளோ அசிங்கப்படுத்திவிட்டு போற பாத்தீங்களா என்று சொல்ல நீ பேசினதுக்கு அவன் என்ன சொல்லி இருந்தாலும் பரவாயில்லை என்று அண்ணாமலையும் சென்று விடுகிறார். மறுபக்கம் மீனா கிச்சனில் முத்துமிடம் இப்ப எதுக்கு நீங்க இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க இப்ப என்ன லைசென்ஸ் தான போச்சு திருப்பியும் வாங்கிக்க என்ன பண்ணனும்னு யோசிக்காம எதுக்கு இதெல்லாம் பண்றீங்க இதுக்கு முன்னாடி இவ்வளவு பிரச்சனை வந்தது அதை எல்லாம் சமாளிக்கலையா எவ்வளவு நைட்டு பகலா கஷ்டப்பட்டு உழைச்சு இருக்கீங்க உங்களுக்கு நம்பிக்கை இரண்டே நாள்ல போயிடுச்சா என்று கேட்டுப் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து இன்ஸ்பெக்டர் மனைவி போன் போட்டு நீ வீட்டுக்கு வா மீனா என்று கூப்பிடுகிறார்.
நான் போயிட்டு வந்துடறேன் என சொல்லிவிட்டு மீனா கிளம்பு அண்ணாமலை முத்துவிற்கு அட்வைஸ் பண்ணுகிறார். பிறகு ரோகிணி சிட்டியை வந்து பார்க்க அவர் என்ன சொல்லுகிறார்? அதற்கு ரோகிணியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.