அண்ணாமலை சொன்ன வார்த்தை, விஜயா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை சொன்ன வார்த்தைக்கு விஜயா முடிவெடுத்துள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 05-08-25

தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை நடந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீதான் என கோபப்படுகிறார். முதல்ல மீனா சொன்ன மாதிரி அந்த பசங்க மேல சந்தேகமா இருக்குன்னு சொல்லி இருக்கும்போதே நீங்க விசாரிச்சு இருக்கணும் அதுவும் பண்ணல அதுவும் இல்லாம உன் மேல தப்பு இல்லாத போதிப்பேன் வீட்ல இருந்து பணம் கேட்கிறதா எதுக்கு ரோகிணி கிட்ட கொடுக்கணும்னு சொல்ற 10 லட்ச ரூபாய் அவன் எப்படி கொடுப்பா அதனால அவ மிரட்டுவதற்கு ஆள் அனுப்பி இருக்கா என்று சொல்லுகிறார். அதற்கு முத்து டான்ஸ் கிளாஸ் நடத்துனவங்க இவங்க பணத்த கொடுக்கிறேன்னு சொல்லி பேசினவன் இந்த ஓடு காலி ஆள வச்சு அடிச்சது இந்த பார்லர் அம்மா இவங்க மூணு பேரும் பண்ண தப்புக்கு என்ன அரஸ் பண்ணி எடுத்துட்டு போறாங்க என் பொண்டாட்டி ஒரு ஒரு வாட்டியும் என்னை போராடி கூட்டிட்டு வரணுமா என்று கேள்வி கேட்கிறார்.

மூவரும் அமைதியாகவே இருக்க அண்ணாமலை அமைதியா விட்டிருந்தா முத்துமீனாவுமே இந்த பிரச்சனையை சரி பண்ணி இருப்பாங்க நீ முதல்ல மூணு மருமகள் மகளா பாரு என்று சொல்ல விஜயா எதுவும் பேசாமல் அமைதியாக சென்று விடுகிறார் உடனே ரோகினி இடம் சென்று நீ ரொம்ப தப்புக்கு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்க இதுக்கு அப்புறம் பண்ண மாட்டேன்னு சொல்ற ஆனா திருப்பியும் பண்ற தயவு செய்து இதுக்கு மேல எந்த பொய்யும் சொல்லாத என்று சொல்லிவிட்டு போகச் சொல்லுகிறார் மனோஜிடம் பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்றது தப்பு இல்ல அதுக்காக படிச்சது மூளையை கொஞ்சம் யோசிச்சு சொந்தமா முடிவெடு என்று சொல்லுகிறார். அண்ணாமலை தூங்கிக் கொண்டிருக்க விஜயா தூங்காமல் யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

அண்ணாமலை எழுந்து தூங்கலையா என்று கேட்க தூக்கம் வரல என சொல்லுகிறார். ஏன் சாப்பிட்டது ஜீரணமாகலையா என்று கேட்க நீங்க பேசின வார்த்தை எல்லாம் என்னால ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்று சொல்லுகிறார். அண்ணாமலை மீண்டும் உன் மேல தான் தப்பு என்று சொல்ல எதுக்கு திருப்பி திருப்பி என் மேலே பழி போட்டுட்டு இருக்கீங்க பண்றது எல்லாம் அந்த ரோகினி தான் பண்ணா ஆனா எனக்கு பழியா என்று கேட்க ஒரு ஒரு வாட்டியோ அவள் கிட்ட பணத்தை கொடு இப்படி பண்ணாத அப்படி பண்ணாதன்னு சொன்னா அவ தப்புதான் பண்ணுவா என்று அண்ணாமலை சொல்லுகிறார்.

நீ முதல்ல ரோகிணி கிட்ட பணம் கேட்கிறதா நிறுத்து அவன் இந்த வீட்ல வாழனுன்றதுக்காக நீ சொல்றதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா என்று சொல்லுகிறார் மூணு மருமகளை ஒண்ணா பாரு என்று திட்டி விட்டு இந்த வீட்டுக்கு இந்த குடும்பத்துக்கும் பெருமை சேர்க்கிற மாதிரி ஏதாவது ஒன்னு பண்ணு என்று சொன்னால் விஜயாவும் சரி என சொல்லுகிறார். மறுபக்கம் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் சீட்டு போட்டு பொருள் வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்திய கையோடு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பணம் கட்டி ரசிது வாங்குகின்றனர். முதல் நாளே மூன்று லட்ச ரூபாய் வந்திருக்கு என்று சொல்ல சந்தோஷமாக எடுத்துக்கொண்டு போய் லாக்கரில் வைக்கின்றனர். இதே மாதிரி நிறைய கூட்டம் வரும் என சந்தோஷப்படுகின்றனர். உடனே ராஜா இந்த பணத்தை வச்சு இன்னும் பொருள் வாங்கி போடுங்க அப்பதான் நம்ம மேல இன்னும் நம்பிக்கை வரும் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் விஜயாவும் பார்வதியும் கோவிலுக்கு வந்த டான்ஸ் கிளாஸ் விஷயம் பற்றி பேசிவிட்டு நான் யோகா கிளாஸ் நடத்த போறேன் என்ற விஷயத்தை சொல்ல உனக்கு யோகா தெரியுமா என்று சொல்ல எங்க அப்பா யோகா கிளாஸ் தான் நடத்திட்டு இருந்தாரு. அதை பார்த்து நானும் கத்துக்கிட்டேன் என பேசிக்கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து பார்வதிக்கு தெரிந்த நபர் ஒருவர் வருகிறார் அந்த பெண்மணி சோசியல் சர்வீஸ் செய்பவர் என தெரிய வருகிறது. உடனே விஜயாவையும் அறிமுகப்படுத்தி வைக்க டேன்ஸ் சொல்லிக் கொடுக்கும் விஷயத்தை யோகா சொல்லிக் கொடுக்கப் போகும் விஷயத்தையும் சொல்ல அவனும் சந்தோஷப்படுகிறார். உடனே சமூக சேவை செய்தவர்களுக்கு டாக்டர் பட்டம் வாங்கி கொடுத்திருக்காங்க என்று சொன்னவுடனே விஜயா டாக்டர் பட்டத்திற்கு ஆசைப்பட்டு பேசுகிறார் விஜயா என்ன பேசுகிறார் அதற்கு அந்த பெண்மணி என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 05-08-25
annamalaimanojMeenaMuthuParvathiRohiniSiragadikkaAasai SerialSiragadikkaAasai Serial Today Episode Update 05-08-25vijaytvஅண்ணாமலைசிறகடிக்க ஆசைபார்வதிமனோஜ்ரோகிணிவிஜயா