பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து சிம்பு போட்ட பதிவு..!

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து சிம்பு பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Simbu posted a post thanking those who wished him a happy birthday..!

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார் மேலும் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, கிஷோர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த திரைப்படம் ஆக்சன் டிராமா மற்றும் திரில்லர் படமாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில் சிம்புவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் இதற்கு பதிலளித்து பதிவு வெளியிட்டு உள்ளார் சிம்பு.

அதில் பிறந்தநாள் வாழ்த்துக்களும், என்னைத் தேடி வந்த அரவணைப்பும் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தன. திரையுலகினர், ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் அன்புடன் உதவிய நலம் விரும்பிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எனது ரசிகர்களே, பல ஆண்டுகளாக உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் என்னை உந்து சக்தியாகக் கொண்டுள்ளன. பாசமும் ஊக்கமும் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்கின்றன. என்று பதிவிட்டு நீங்க இல்லாம நான் இல்லை என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

'அரசன்'ArasanbirthdayLatest newsLatest updateSilambarasan TRSimbu posted a post thanking those who wished him a happy birthday..!Tamil cinemaviralஆண்ட்ரியாகலைப்புலி எஸ் தானுகிஷோர்சமுத்திரகனிசிலம்பரசன்விஜய் சேதுபதிவெற்றிமாறன்