தீபாவளி ரேஸில் சிம்புவின் ‘அரசன்’: விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக அதிரடி!

சென்னை: சிலம்பரசன் TR மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ (Arasan) திரைப்படம் குறித்த அடுத்தடுத்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பிரம்மாண்ட செட்

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னையில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ‘வட சென்னை’ உலகத்தோடு தொடர்புடைய கதை என்பதால், படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் வேடத்தில் விஜய் சேதுபதி

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் இதில் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிம்பு மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் திரையரங்குகளில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு நிறைவு மற்றும் வெளியீடு

படக்குழுவினர் திட்டமிட்டபடி மே மாத இறுதிக்குள் அல்லது ஜூன் முதல் வாரத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

  • தயாரிப்பாளர்: கலைப்புலி எஸ். தாணு (V Creations)

  • இசை: அனிருத் ரவிச்சந்தர்

  • இலக்கு: 2026 தீபாவளி வெளியீடு

நவம்பர் 5 அல்லது 6-ல் ரிலீஸ்?

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை ஒரு மெகா தீபாவளி விருந்தாகக் கொண்டு வரத் தீவிரமாக உள்ளார். அதன்படி, நவம்பர் 5 அல்லது 6-ம் தேதி (தீபாவளி பண்டிகையை முன்னிட்டு) ‘அரசன்’ உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

'அரசன்'actor simbuactor vijay sethupathiArasandirector vetrimaaranKalaipuli S. ThanuSilambarasan TRSTRகலைப்புலி எஸ். தாணுசிலம்பரசன் TRவிஜய் சேதுபதி