சிம்பு-வெற்றிமாறன் இணையும் ‘வடசென்னை-2’ படத்தின் அப்டேட்ஸ்..

சிம்பு-வெற்றிமாறன் இணைந்துள்ள வடசென்னை-2 திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ நேரடியாக திரையரங்கில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. முதலில் இந்த ப்ரோமோவை யூடியூபில் வெளியிடவே வெற்றிமாறன் முடிவெடுத்திருந்தார். அதன் பிறகு இந்த அறிவிப்பு ப்ரோமோவை நேரடியாக திரையரங்கில் வெளியிட்டால் என்ன? என யோசித்திருக்கிறார்.

சிம்பு -வெற்றிமாறன் கூட்டணி அவர்களின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில், தற்போது சிம்புவின் இந்த 49-வது திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோவிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஜூலை இரண்டாம் வாரத்தில் இந்த அறிவிப்பு ப்ரோமோ வெளியாகிவிடும். ஆனால், எந்த தேதியில் வெளியாகின்றது என்பது குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவேண்டும்.
சிம்பு ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

மிகவும் குறுகிய காலகட்டத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட வெற்றிமாறன் முடிவெடுத்துள்ளார். எனவே, கண்டிப்பாக அடுத்தாண்டு துவக்கத்தில் இப்படம் ரிலீசாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

simbu and vetrimaran movie announcement promo release
actor simbudirector vetrimaaranvadachennai movieசிம்புவெற்றிமாறன்