மகளுடன் குட் பேட் அக்லி படம் பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார் ஷாலினி அஜித்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது ரசிகர்கள் பலரும் ஆரவாரத்துடனும் முதல் நாள் முதல் காட்சி பார்த்த கொண்டாடி வருகின்றனர்.
ஆதிரவிச்சந்திரன் இயக்கத்திலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் அஜித் குமாரின் மனைவியான ஷாலினி அஜித் மற்றும் மகளான அனோஷ்கா அஜித் இருவரும் குட் பேட் அக்லி படத்தை பார்க்க கோயம்பேட்டில் இருக்கும் ரோகினி திரையரங்கிற்கு சென்று உள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.