சந்தானம், சூரி நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

சிம்பு படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். இதைத்தொடர்ந்து சினிமாவில் முதல் முறை வாய்ப்பு கொடுத்தவர் சிம்பு. இது பற்றி சந்தானம், ‘என்றைக்கும் நான் சிம்புவை மறக்கமாட்டேன்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

விழா நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் அளித்த பேட்டிகளிலும் சினிமா பயணம் குறித்து பேசும் சந்தானம், சிம்புவை பற்றி பேசாமல் இருந்தது கிடையாது. வாய்ப்பு கொடுத்தது சிம்புவாக இருந்தாலும், தனது திறமையால் உயர்ந்து நிற்பவர் சந்தானம். காமெடியனாக வந்து தற்போது ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சிம்பு-சந்தானம் இணைந்து நடித்த மன்மதன், வல்லவன், காளை, வானம், வாலு, ஒஸ்தி, சிலம்பாட்டம் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், சந்தானம் ஹீரோவாக மட்டுமே நடிக்கத் தொடங்கி விட்டார். இதனால், சிம்புவின் ‘எஸ்டிஆர் 49’ படத்தில் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது.

இச்சூழலில், சந்தானம் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார். இது பற்றித் தெரிவிக்கையில், ‘ஒருநாள் சிம்பு சார் போன் பண்ணி, என்னுடைய படத்தில் நீங்க நடிக்கிறீர்களா? என கேட்டார். சிம்பு கேட்டால் முடியாது என்று சொல்ல முடியாது. அவர் கேட்டால் எப்போதும் ஓகேதான்’ என கூறியுள்ளார்.

மேலும், இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம் நடித்திருக்கிறார். கெளதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இப்படம் வரும் மே 16-ந்தேதி ரிலீஸாகிறது. அதே நாளில் சூரி நடித்துள்ள ‘மாமன்’ படமும் ரிலீஸாகிறது. இருவரும் காமெடியனாக அறிமுகமாகி, ஹீரோவாக வளர்ந்து, கலக்கல் காமெடியாக மோதவுள்ளனர். பார்க்கலாம்.!

actor santhanamactor simbuactor sooriசிம்புடிடி நெக்ஸ்ட் லெவல்