ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்தானம்?

‘கூலி’ படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் தகவல்கள் காண்போம்..

சுந்தர்.சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ‘மதகஜராஜா’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து சந்தானம், சிம்புவின் STR49 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், சந்தானம் இனி மற்ற ஹீரோக்களின் படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வகையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் சந்தானம் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சந்தனத்துடன் இயக்குனர் நெல்சன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்த பேச்சுவார்த்தை நல்லபடியாக நடக்கும் நிலையில் சந்தானம் கண்டிப்பாக இப்படத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், சந்தானம் இப்படத்தில் நடிப்பதாக வந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்மை என தெரியவரும்.

சந்தானம் இப்படத்தில் நடிப்பது உறுதியானால் 11 வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினி -காம்போ உருவாகும். கடைசியாக சந்தானம் ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் நடித்தார்.

இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் நடிப்பதாக சொல்லப்படுவதை போல, எஸ்.ஜே. சூர்யா,  இப்படத்தில் வில்லனாக நடித்து வருகின்றார் எனவும், பகத் பாசில், பாலையா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தில் நடித்த சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் இப்படத்திலும் நடிக்கின்றனர் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.!

santhanam acting in rajinikanth starring jailer 2 movie
actor santhanamactor simbuRajinikanthஎஸ்.ஜே. சூர்யாரஜினி